குஜராத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை!!
குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள 89 தொகுதிகளுக்கு வரும் 5ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 14ஆம் தேதி கடைசி நாள்.
வேட்பு மனுக்கள் மீது நவம்பர் 15ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். நவம்பர் 17 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள 93 தொகுதிகளுக்கு வரும் 10ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ஆம் தேதி கடைசி நாள்.
வேட்பு மனுக்கள் மீது நவம்பர் 18ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். நவம்பர் 21 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிறது.
newstm.in