காவல் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!!
கள்ளச்சாராயத்தால் 12 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் முதல்வர் கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர்.
இந்தப் பிரச்னையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாக, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை ;சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.
newstm.in