காரில் நம்பி ஏறிய பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!!
நண்பரை நம்பி காரில் ஏறி சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு திரிபுராவில் கல்லூரி மாணவி ஒருவர் வெளியே சென்று விட்டு, தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவருக்கு தெரிந்த கெளதம் ஷர்மா என்ற நண்பர் காரில் வந்துள்ளார். அவருடன் அவரது காரில் 2 நண்பர்களும் இருந்துள்ளனர்.
அப்போது லிப்ட் தருவதாக அவர் அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். பின்னர் அந்த இளைஞர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பயந்துபோன அந்த பெண், உடனடியாக காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை ஓடும் காரில் வைத்தே மூன்று பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் பெண்ணை அமடாலி பைபாஸ் நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய கெளதம் ஷர்மா (26), மற்றும் அவரது நண்பர்கள் சுதீப் சேத்ரி (31), பிரசென்ஜித் பால் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கெளதம் ஷர்மாவை சுமார் 5 மாத காலமாக தெரியும் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in