காதல் மன்னனாக சுற்றும் ஜெகஜால கில்லாடி.. கணவர் மீது முதல் மனைவி புகார்..!!
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் வசித்து வருபவர் ஏஞ்சல் மரிய பாக்கியம். இவர் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார் அதில், 'தனக்கும் குரும்பூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது இவர்களுக்கு அபிஷா, அஜிதா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவர் முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடுத்த துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் முத்துக்குமாரின் குடும்பத்தினர் ஏஞ்சலிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.
குடும்பமே சேர்ந்து டார்ச்சர் செய்வதை தாங்க முடியாத ஏஞ்சல், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசாரும் முத்துக்குமாரின் குடும்பத்தை அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர்கள் ஏஞ்சலை சமாதானம் செய்து அழைத்து சென்றுள்ளனர். ஆனால், காவல் நிலையம் சென்றதற்கு சேர்த்து ஏஞ்சலுக்கு செய்யும் டார்சர் நாளுக்கு நாள் இருமடங்காக உயர்ந்தது. இதனை பொறுத்து கொள்ள முடியாத ஏஞ்சல் குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தைகளின் செலவுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாதம் ரூ.9,000 ஏஞ்சல் மரியத்துக்கு வழங்க வேண்டும் என கடந்த 2020-ம் ஆண்டு முத்துக்குமாருக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தர வில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஏஞ்சல் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என மீண்டும் முத்துக்குமார் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் தான் இவருக்கு புதிய அதிர்ச்சி காத்திருந்தது. முத்துக்குமார் எங்கே இருக்கிறார் என ஏஞ்சல் மரியம் விசாரித்துள்ளார். அப்போது அவர் 2 திருமணங்கள் செய்திருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். முதல் திருமணத்தை மறைத்து, மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்ற அருள் அன்புச் செல்வி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதும், பெற்றோர்கள் ஏற்பாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த டெல்சி ராணி என்பவரையும் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கொண்டார்.
ஏற்கனவே 2 பெண் குழந்தைகளை வைத்து கஷ்டப்படும் ஏஞ்சலுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியாக இந்த திருமண செய்தி இருந்தது. இதனால் குழந்தைகளின் நலனுக்காக நீதிமன்றம் நாடிய ஏஞ்சல், பல பெண்களை ஏமாற்றி வரும் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டார்.
தன்னை முறையாக விவாகரத்து பெறாமல் 2 திருமணங்கள் செய்த முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும், திருமணம் செய்து கொண்ட 2 பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.மேலும் இது குறித்த சில ஆவணங்களையும் சமர்பித்து நீதி கிடைக்க வேண்டும் என கோரினார்.