காதலியை கொன்று பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்!!
![காதலியை கொன்று பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/dac52bc7024b10c9ab63d73f31d88e40.webp?width=836&height=470&resizemode=4)
மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியைச் சேர்ந்த சதாம் சையத் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கவிதா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சதாம், கவிதாவின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் கவிதா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பதற்றமடைந்த சதாம், கவிதாவின் சடலத்தை மறைக்க வேண்டுமென்று ஒரு ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அதில் கடத்தியுள்ளார்.
![காதலியை கொன்று பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/3dce8a7cf8c5eac9b715f06f50d0c12d.webp)
சதாம் கவிதாவின் சடலத்தை கொண்டு செல்வதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு அவர்கள் ஆம்புலன்சில் தப்பி சென்ற சதாமை புனே அடுத்த பிஜாப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் சதாமை கைது செய்ததோடு, கவிதாவின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
சதாம் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in