காதலிக்க மறுத்த பெண் வீட்டில் குண்டு வீச்சு!!
மதுரையில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல அனுப்பானடி பகுதியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சரவணக்குமார் என்பவரின் குடும்பமும், மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் எதிரெதிர் வீட்டில் வசித்து வந்தனர்.
அப்போது சரவணக்குமாரின் 15 வயது மகளுக்கு, மருதுபாண்டியின் மகன் மணிரத்னம் (23) காதல் தொல்லை கொடுத்து வந்தார். இதனை அறிந்த சரவணக்குமார், மணிரத்னத்தை கண்டித்துள்ளார்.
அதை கேட்காமல் மணிரத்னத்தின் தொந்தரவு நாளுக்கு அதிகமானால் சரவணக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் மருதுபாண்டி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.
இதனிடையே பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு சிறை சென்ற மணிரத்னம் 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த அவர் போதை அதிகமாகி விபரீத செயல் ஒன்றை செய்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து சரவணக்குமாரின் வீட்டிற்கு சென்ற மணிரத்னம் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றார். வாசலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிரத்னம் மற்றும் அவரது நண்பர் பார்த்தசாரதி (22) ஆகிய இருவரை கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
newstm.in