கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி..!!
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பரிதாபமாக மரணமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் , நேற்று பாதிக்கப்பட்டவர்களின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார். சிகிச்சை பெற்று வருவோரிடம் எடப்பாடி பழனிசாமி நலம், விசாரித்ததுடன் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார்.இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் உடன் இருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; 2 ஆண்டுகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. சுமார் 1,600 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலி மதுபான விற்பனை காவல்துறைக்கு தெரியவந்தது. அதனால் தான் இரண்டே நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடு விற்பனை நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும். அரசின் மெத்தனத்தால் பல உயிர்கள் போயுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
.png)