1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்காதல் விஷயம் தெரிந்ததால் மிளகாய் பொடி தூவி கணவனை கொன்ற மனைவி!!

கள்ளக்காதல் விஷயம் தெரிந்ததால் மிளகாய் பொடி தூவி கணவனை கொன்ற மனைவி!!

கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால், மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே கந்தன் என்பவர் சந்தியா என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கந்தனின் மனைவி சந்தியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரது செல்போனை ஆய்வு செய்தார். அதில் சக்தியும், சந்தியாவும் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. ஆத்திரமடைந்த கந்தன், மனைவியை கண்டித்துள்ளார்.


கள்ளக்காதல் விஷயம் தெரிந்ததால் மிளகாய் பொடி தூவி கணவனை கொன்ற மனைவி!!

இந்நிலையில், சந்தியாவும், சக்தியும் ஒன்றாக சேர்ந்து கந்தன் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பலமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சந்தியா சக்தியின் நண்பரிடம் கணவர் வழுக்கி விழுந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நண்பர் வசந்த், கந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.


கள்ளக்காதல் விஷயம் தெரிந்ததால் மிளகாய் பொடி தூவி கணவனை கொன்ற மனைவி!!


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்த் நண்பரின் மனைவியுடன் சக்தி இருப்பதால் சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like