கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற கொடூர தாய்!!
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சலிம்பாய் வாகேர் – ஹூசேனாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரெஹான், ஆர்யன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள். இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் என்ற இளைஞருடன் கள்ள உறவு ஏற்பட்டது. உறவுக்கு தனது குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து தாய் ஹூசேனா பெற்ற குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹூசேனா தாய் வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஜாகீருடன் தனி வீடு எடுத்து வசிக்கத் தொடங்கியுள்ளார். 4 வயது மகனை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, 2 வயது குழந்தையை தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி குழந்தை ஆர்யன் இறந்துவிட்டதாக தந்தை சலீமுக்கு தகவல் வந்தது. அவர் வந்து குழந்தையை பார்த்த போது, வயிறு, முதுகு பகுதிகளில் காயங்களும் தழும்புகளும் இருந்தது.
தனது மனைவியும், அவரது காதலன் ஜாகீரும் தான் குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக சலீம் காவல்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குழந்தை சித்தரவதை செய்யப்பட்டு உயிரிழந்தது உறுதியானது.
சலீம் அளித்த புகாரின் பேரில் ஹூசேனா மற்றும் காதலன் ஜாகீர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in