1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!! ஆட்சியை கைப்பற்றப்போவது..

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!! ஆட்சியை கைப்பற்றப்போவது..

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாகுப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13-ம் (சனிக்கிழமை) தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு ஆங்கில, கர்நாடக செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை. பிரபல ஆங்கில செய்திநிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரம்:-

இந்தியா டுடே - மேக்ஸ் மை லைப்:

பா.ஜ.க. - 62 முதல் 80.

காங்கிரஸ் - 122 முதல் 140.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20 முதல் 25.

ஏபிபி செய்திகள்- சி ஓட்டர்ஸ்:-

பா.ஜ.க. - 83 முதல் 95.

காங்கிரஸ் - 100 முதல் 112.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 முதல் 29.

மற்றவை - 2 முதல் 6.

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்:-

பா.ஜ.க. - 80 முதல் 90.

காங்கிரஸ் - 110 முதல் 120.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20 முதல் 24.

மற்றவை - 1 முதல் 3.

நியூஸ் நேஷன் - சிஜிஎஸ்:-

பா.ஜ.க. - 114.

காங்கிரஸ் - 86.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21.

மற்றவை - 3.

ரிபப்ளிக் டிவி- பி மார்கியூ

பா.ஜ.க. - 85 முதல் 100.

காங்கிரஸ் - 94 முதல் 108.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 24 முதல் 32.

மற்றவை - 2 முதல் 6.

சவமு நியூஸ் - ஜன் கி பத்:-

பா.ஜ.க. - 94 முதல் 117.

காங்கிரஸ் - 91 முதல் 106.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 14 முதல் 24.

மற்றவை - 0 முதல் 2.

டைம்ஸ் நவ்-இடிஜி:-

பா.ஜ.க. - 85.

காங்கிரஸ் - 113.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 23.

மற்றவை - 3.

டிவி9 பாரத்வாஷ் - பொல்ஸ்ரட்:-

பா.ஜ.க. - 88 முதல் 98.

காங்கிரஸ் - 99 முதல் 109.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 முதல் 26.

மற்றவை - 0 முதல் 4.

சி நியூஸ் - மார்ட்ரிஸ்:-

பா.ஜ.க. - 79 முதல் 94.

காங்கிரஸ் - 103 முதல் 118.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 25 முதல் 33.

மற்றவை - 2 முதல் 5.

Trending News

Latest News

You May Like