1. Home
  2. தமிழ்நாடு

கருணை கொலைக்கு அனுமதி கொடுங்க: ஜனாதிபதி, பிரதமருக்கு ஒப்பந்ததாரர் கடிதம்..!

கருணை கொலைக்கு அனுமதி கொடுங்க: ஜனாதிபதி, பிரதமருக்கு ஒப்பந்ததாரர் கடிதம்..!

கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த பணம் ஒரு கோடி ரூபாயை விடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள காரணத்தால் என்னால் குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே, நான் கருணை கொலை செய்துகொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசு ஒப்பந்ததாரர் கடிதம் அனுப்பியுள்ளார்.


கர்நாடக மாநிலத்தில் அரசு ஒப்பந்த பணிகளுக்கு அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கமிஷன் விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள், பசவராஜ் பொம்மையை பதவி விலகக் கோரி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தார்வார் மாவட்டம் உப்பள்ளி சாந்திநகரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பசவராஜ் அமரகோல் என்பவர், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அதில், "அரசு ஒப்பந்த பணிகளுக்காக 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த பணத்தை விடுக்காத காரணத்தால் என்னால் குடும்பம் நடத்த முடியவில்லை. ஒரு கோடி ரூபாயை 2 ஆண்டுகளாக கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, நான் கருணை கொலை செய்துகொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like