கணவர் இறந்த செய்தி கேட்டு பலியான மனைவி!!
காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த செய்தியை கேட்டு மனைவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி – மல்லிகா தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த துரைசாமி காலை நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் துரைசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே துரைசாமி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த தகவல் மனைவி மல்லிகாவுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். அவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரது இறுதி நிகழ்ச்சியும் ஒன்றாக நடத்தி இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
newstm.in