1. Home
  2. தமிழ்நாடு

ஓடும் ரயிலில் பயங்கரம்... பயணியிடம் வம்பிழுத்த இளைஞரை ரயிலிலிருந்து வெளியே தள்ளிய பரபரப்பு சிசிடிவி காட்சி..!!

ஓடும் ரயிலில் பயங்கரம்... பயணியிடம் வம்பிழுத்த இளைஞரை ரயிலிலிருந்து வெளியே தள்ளிய பரபரப்பு சிசிடிவி காட்சி..!!

கொல்கத்தாவில் இருந்து மால்தா டவுன் என்ற இடத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த ரயிலில் சாஜல் ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த இளைஞர் தனது கால்களை பிற பயணிகளின் இருக்கைமீது வைத்துக்கொண்டு, போன்பேசியபடி வந்துள்ளார். இதனை சக பயணிகள் கண்டித்த நிலையில், பெண்கள் உள்ளிட்ட பயணிகளை தகாத வார்த்தைகள் பேசி திட்டி மிரட்டிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் இது குறித்து கேட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறுது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் குறித்து இளைஞர் தவறாக பேசிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரை ரயிலிலிருந்து வெளியே தள்ளியுள்ளார்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளத்திலிருந்து பலத்த காயங்களுடன் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த நபரை தேடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Trending News

Latest News

You May Like