ஓடும் ரயிலில் ஏறும் போது தடுமாறிய நபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலர்..!
டாடாநகர் ரெயில் நிலையத்தில் சில பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற முயல்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் தவறி விழுந்தார். இந்த நிலையில் பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் ஓடி வந்து அந்த நபரை காப்பாற்றினார். பின்னர், அந்த நபர் அவரது பொருட்களுடன் அதிகாரியின் உதவியுடன் ரெயிலில் ஏறி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
.png)