ஓடிடியில் வெளியானது வெந்து தணிந்தது காடு..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டடித்துள்ளது. அதில் மல்லிகைப்பூ பாடல் மிகவும் பிரபலமானது.
ஒரு சாதாரண மனிதன் பிழைப்பிற்காக வெளியூர் சென்று காலத்தின் சூழ்நிலையால் எவ்வாறு கேங்ஸ்டராக மாறுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.
இந்நிலையில், 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை அமேசான் ஓடிடி நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.