1. Home
  2. தமிழ்நாடு

ஐடிஐ, டிப்ளமோ போதும்!! ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸில் வேலைவாய்ப்பு..!!

ஐடிஐ, டிப்ளமோ போதும்!! ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸில் வேலைவாய்ப்பு..!!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Aircraft Technician (Maintenance & Overhaul Shops) Aircraft and Engines (B-1), Avionics (Electrical/ Instrumental/ Radio) (B-2), Technician (Skilled) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலி பணியிடங்கள்: 371

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது பொது/ ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 35 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு 38 ஆகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 40 ஆகவும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஐடிஐ, டிப்ளமோ போதும்!! ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸில் வேலைவாய்ப்பு..!!



கல்வி தகுதி:இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000/-

எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணவ பிரிவினருக்கு ரூ.500/-

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test/Trade Test/Technical Assessment & Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதள https://www.aiesl.in/Careers மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2023

Trending News

Latest News

You May Like