1. Home
  2. தமிழ்நாடு

ஏமாற்றிய காதலி.. கழுத்தை அறுத்து கொன்று வீடியோ வெளியிட்ட கொடூர காதலன்..!

ஏமாற்றிய காதலி.. கழுத்தை அறுத்து கொன்று வீடியோ வெளியிட்ட கொடூர காதலன்..!

ஏமாற்றிய காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கொடூர காதலனை, நான்கு சிறப்பு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும், மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்தனர்.


இந்நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் ஷில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். மேலும், இருவரிடமும் ஆசை வார்த்தைகளைப் பேசி 12 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

ஷில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் அவரது கூட்டாளிக்கு தெரியவர, ஷில்பாவை கொலை செய்ய அபிஜித் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக ஜபல்பூர் வந்த அபிஜித், அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி ஷில்பாவை வரவழைத்துள்ளார். அங்கு வந்த ஷில்பாவை மடக்கிப்பிடித்து கழுத்தை அறுத்துள்ளார்.


அத்துடன், ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஷில்பாவை வீடியோ எடுத்த அபிஜித், தன்னை ஏமாற்றியதற்காகத்தான் இந்த தண்டனை கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலுன் அந்த வீடியோவை அபிஜித் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.

இந்நிலையில், ஷில்பாவை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள அபிஜித்தை தேடிப் பிடிக்க நான்கு சிறப்பு தனிப்படையை ஜபல்பூர் மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது.

Trending News

Latest News

You May Like