எப்படி இருக்கீங்க.. கவலைப்படாதீங்க.. ஜே.என்.யு. மாணவருடன் காணொலியில் பேசிய அமைச்சர் உதயநிதி..!!
ஜே.என்.யூ வில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் தமிழக மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
ஒரு மாணவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதை தட்டி கேட்ட இன்னும் சில தமிழக மாணவர்களையும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் சரமாரியாக தாக்கி உள்ளனர். கடுமையான காயங்களுடன் ஆம்புலன்சில் ஏறிய தமிழக மாணவரையும் ஆம்புலன்சில் ஏறி ஏ.பி.வி.பி. மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துணை வேந்தரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
அங்கு இருக்கும் பெரியார் படம் ஒன்றை ஏ.பி.வி.பி. மாணவர்கள் உடைத்து உள்ளனர். இதனை தமிழக மாணவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதையடுத்தே ஏ.பி.வி.பி. மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஏ.பி.வி.பி. மாணவர்களோ சத்திரபதி சிவாஜி படத்தை அவமதித்து விட்டனர். அதை தரையில் போட்டு உடைத்து விட்டனர். அதை தட்டி கேட்ட போது சண்டை ஏற்பட்டு விட்டது. இதில் நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தாக்கப்பட்ட மாணவர்களிடம் வீடியோ காலில் பேசிய உதயநிதி ஸ்டாலின். எப்படி இருக்கீங்க.. நாங்க நடவடிக்கை எடுக்க சொல்லுறோம்.. கவலைப்படாதீங்க.. யார் தாக்குதல் நடத்தினார்கள். ஏ.பி.வி.பி. அமைப்பா என்று கேள்வி எழுப்பி மாணவர்களிடம் பேசினார்.