1. Home
  2. தமிழ்நாடு

என்ன நடக்கிறது மெட்ரோவில்...ஒரு துண்டு போதும் எங்களுக்கு....

Q

பிரபல மாடல் அழகியான ரஷியாவை சேர்ந்தவர் கேத் சும்ஸ்கயா.

இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 30 லட்சம் பேர் இவரைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தோழிகள் 3 பேருடன் இணைந்து குளியல் அறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். அதில் அரைகுறையாக உடம்பை மூடியபடி, ‘ஹை ஹீல்ஸ்’ செருப்பு அணிந்தவாறு அவர்கள் 4 பேரும் மெட்ரோ ரெயிலுக்குள் ஏறுகிறார்கள்.

பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரெயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு லூட்டி அடிக்கிறார்கள். இந்த வீடியோ ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like