என்ன தான் சரக்கு அடிச்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காரவள்ளியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மது போதையில் ஏறிய ஒருவர், பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே மது போதையில் இருந்தவர் கண்மூடித்தனமாக நடத்துனரை சரமாறியாக தாக்கியுள்ளார். இதையடுத்து கீழே இறங்கிய நடத்துனரும் மது போதையில் இருந்தவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மது போதையில் பேருந்து நடத்துனரிடம் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.