1. Home
  2. தமிழ்நாடு

என்ன கல்யாணம் பண்ணிட்டு கேர்ள் ப்ரண்ட் கூட ஷாப்பிங் போறியா ... கணவனை வெளுத்த மனைவி..!!

என்ன கல்யாணம் பண்ணிட்டு கேர்ள் ப்ரண்ட் கூட ஷாப்பிங் போறியா ... கணவனை வெளுத்த மனைவி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி. இவர் தனது மனைவிக்கு தெரியாமல் காதலியை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றுள்ளார். அவர் தனது காதலிக்காக ஒவ்வொரு கடையாக ஏறி அவருக்கு தேவையான பொருள்களை ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக திவாரியின் மனைவியும் தனது தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார்.

என்ன கல்யாணம் பண்ணிட்டு கேர்ள் ப்ரண்ட் கூட ஷாப்பிங் போறியா ... கணவனை வெளுத்த மனைவி..!!

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திவாரி தனது காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் திடீரென அவரின் மனைவியும் உள்ளே வந்துள்ளார். தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பதை கண்ட திவாரி மனைவி, உடனே தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு தனது கணவரின் சட்டை காலரை பிடித்து அவரை சரமாறியாக அடிக்க ஆரம்பித்தார்.

இதனால், கடையில் கூட்டம் கூடிவிட்டது. கடை உரிமையாளர் உங்களது சண்டையை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். திவாரி அடிபடுவதை பார்த்து அவருடன் வந்த பெண் அதனை தடுக்க முயன்றார். உடனே அந்த பெண்ணுக்கும் தர்ம அடி விழுந்தது. இந்த சண்டையை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



இது குறித்து திவாரியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் திவாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, திவாரியின் மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் திவாரி வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை பார்த்து அவரின் மனைவி கோபமாகி அடித்து உதைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like