1. Home
  2. தமிழ்நாடு

என் நடத்தையிலா சந்தேகப்படுற... கணவனை செங்கலால் அடித்து கொன்ற மனைவி..!

என் நடத்தையிலா சந்தேகப்படுற... கணவனை செங்கலால் அடித்து கொன்ற மனைவி..!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவடா நதுவா கிராமத்தை சேர்ந்தவர் பப்பு (25). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, தனது மனைவி வெறொரு நபருடன் தொடர்பில் உள்ளார் என்று பப்பு நினைத்து உள்ளார்.

இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்தபோதும் பப்பு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். இந்நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த சனிக்கிழமை இரவு பப்பு தனது மனைவியிடம் மீண்டும் சண்டையிட்டுள்ளார்.

என் நடத்தையிலா சந்தேகப்படுற... கணவனை செங்கலால் அடித்து கொன்ற மனைவி..!

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தன் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை பப்புவின் மனைவி செங்கலால் கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் பப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மனைவி தாக்கியதில் படுகாயமடைந்த பப்புவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பப்புவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like