1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கை! கோமியம் குடிப்பது மிகவும் ஆபத்து!!

எச்சரிக்கை! கோமியம் குடிப்பது மிகவும் ஆபத்து!!

மாட்டு கோமியத்தை குடித்தால் மனிதர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படும் என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாட்டை வைத்து அரசியல் செய்து வரும் பாஜக, கோமியத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது. அதே போல், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் சில பிஎச்.டி மாணவர்கள் கொண்ட குழு ஆய்வு நடத்தியது.


எச்சரிக்கை! கோமியம் குடிப்பது மிகவும் ஆபத்து!!


அதில் மாட்டு கோமியத்தில் மனிதர்கள் உடல்நலத்துக்கு நல்லது அல்ல என்றும், அதிலிருக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் மனிதர்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் எனவும் கண்டறியப்பட்டது.

இந்த பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்று மற்றும் வேறு சில பிரச்னைகளை உருவாக்கும் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் மாட்டு சாணம், கோமியம் என மனிதர்கள் உண்டால் அவர்களுக்கு எந்த நோய் வேண்டுமானாலும் வரக்கூடும் என நிரூபணம் ஆகியுள்ளது.


எச்சரிக்கை! கோமியம் குடிப்பது மிகவும் ஆபத்து!!


கொரோனா காலத்தில் மாட்டும் கோமியம் குடித்தால் நோய் தீரும் என்று இந்துத்வா கும்பல் கூறிவந்தது. ஆனால் அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் தற்போது கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like