ஊறவைத்த அரிசியை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!!
வீட்டில் ஊறவைத்திருந்த அரிசியை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் பகுதியை சேர்ந்த மாரிசாமி என்பவரின் மகள் நிகிதா லட்சுமி (8) அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் வீட்டில் சமையலுக்காக ஊறவைத்திருந்த அரிசியைச் சாப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமிக்கு உடலில் எந்த கோளாறும் இல்லாத நிலையில், எப்படி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்தார் என்று தெரிவில்லை என்று தாய் பரமேஸ்வரி கூறியுள்ளார்.
8 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in