1. Home
  2. தமிழ்நாடு

உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநருக்கு கொரோனா!!

உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநருக்கு கொரோனா!!

உலக அளவில் மிகவும் பிரபலம் வாய்ந்த திரைப்பட இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

75 வயதாகும் இவர் இன்றும் சர்வதேச அளவில் ஜாம்பவான் இயக்குநராக கருதப்படுகிறார். தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நியூயார்க்கில் கோதம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்துள்ளார்.


உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநருக்கு கொரோனா!!

1964ஆம் ஆண்டு ஃபயர் ஃபிளைட் என்ற படத்தின் இயக்குநராக ஸ்பீல்பெர்க் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இளம் இயக்குநர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து இயங்கி வரும் அவர், தி பேபில்மேன்ஸ் என்ற திரைப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.


உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநருக்கு கொரோனா!!


கோதம் விருது வழங்கும் விழாவில் திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like