1. Home
  2. தமிழ்நாடு

இவர் தான் உலகிலேயே மிகவும் குள்ள மனிதர்..!!

இவர் தான் உலகிலேயே மிகவும் குள்ள மனிதர்..!!

உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே கொலம்பியாவைச் சேர்ந்த Edward 'Niño' Hernandez (36) என்னும் நபர் இடம் பிடித்திருந்தார். அவரை விட ஆப்சின் (Afshin) 7 சென்டி மீட்டர் உயரம் குறைந்தவர் என்பதால், தற்போது இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவரது உயரம் 2அடி ஒரு அங்குலம், அதாவது 65.24 சென்டி மீட்டர்.

20 வயதாகும், ஆப்சின் இஸ்மாயில் ஈரானிலுள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரால் ஒரு மொபைல் போனை சுமப்பது கூட கஷ்டம் தான் என்றாலும் அவரால் தானாகவே நடமாட முடியும். எங்கு சென்றாலும் அவரது பெற்றோர்களில் ஒருவர் அவரை தூக்கிக்கொண்டுதான் நடக்கின்றனர். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும் ஆப்சினுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவரது சிகிச்சைக்கு செலவு செய்வதற்கு பணம் இல்லாமல் அவரது பெற்றோர் கஷ்டப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.


இவர் தான் உலகிலேயே மிகவும் குள்ள மனிதர்..!!

தனது சாதனை குறித்து கூறிய ஆப்ஸின், தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதுதான் என ஆசை என தெரிவித்து உள்ளர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விடயத்தால் தனக்குக் கிடைக்க இருக்கும் புகழ், தனது குடும்பத்துக்கு உதவ தனக்கு உதவியாக இருக்கும் என்று நம்பவுதாகவும் தெரிவித்து உள்ளார்.

Trending News

Latest News

You May Like