1. Home
  2. தமிழ்நாடு

இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருக்க டாக்டர் செய்த செயலை பாருங்க..!!

இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருக்க டாக்டர் செய்த செயலை பாருங்க..!!

சேலம் மாவட்டத்தில் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் சேலத்தில் தனியார் சித்தா மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அந்த மருத்துவ மாணவி அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரில் , திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வரும் தமிழ்ச்செல்வன் என்பவர் சமூக வலைத்தள மூலமாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டு திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை உடன் சொல்லி வந்ததார்.

பலமுறை இருவரும் வெளியே சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளோம். இதில் கர்ப்பமானதும் கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்தார். திருமணத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது . இப்போதே கர்ப்பமாகிவிட்டால் நல்லதல்ல என்று சொல்லி கர்ப்பத்தை கட்டாயப்படுத்தி தான் கலைக்க வைத்தார்.

கர்ப்பத்தை கலைத்த பின் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். வீட்டிற்கு வருவதையும் தவிர்த்து விட்டார். என்னை ஏமாற்றிய டாக்டர் தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

மருத்துவ மாணவியின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like