1. Home
  2. தமிழ்நாடு

இளம் பெண்களுடன் பழகி புகைப்படங்களை மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்த ஈரோடு இளைஞர்கள்!

இளம் பெண்களுடன் பழகி புகைப்படங்களை மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்த ஈரோடு இளைஞர்கள்!

இளம் பெண்களுடன் நட்பாக பழகி புகைப்படங்களை பெற்றுக் கொண்டு, மாபிங் செய்து ஆபாசமாக சித்தரித்து பல பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஈரோடு பகுதியை சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகிய இரு சகோதர இளைஞர்கள் கைது செய்தது போலீஸ்.

தமிழ் சினிமா நடிகர் தர்ஷனின் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்ததின் பேரில் அதனை ஏற்று அந்த பெண் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.


இளம் பெண்களுடன் பழகி புகைப்படங்களை மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்த ஈரோடு இளைஞர்கள்!



அப்பெண்ணின் போட்டோக்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட நபர் அதனை மாஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்து விடுவதாகும் கூறி மிரட்டி சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தினை பறித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்த காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார்,ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன், வாகித்,ஆகிய இரு சகோதரர்கள் சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பெண்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

ஈரோடு பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸ் இரு இளைஞர்களையும் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான பெண்களிடம் மிரட்டி இதே போன்று பணம் பறித்துள்ளது தெரிய வந்ததுள்ளது.

Trending News

Latest News

You May Like