இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..! மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்..!
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் பகுதிகளில் சாகுபடி செய்த தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. எனவே தக்காளி மீண்டும் விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பயிரிடப்பட்டுள்ள செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை. மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது.
அதே நேரத்தில் விவசாயிகள் மீண்டும் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவை தை மாதத்தில்தான் அறுவடைக்கு வரும். எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.