இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! எண்ணெய் விலை குறைய போகிறது..!!
சர்வதேச சந்தையில் கமாடிட்டி எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால், உள்நாட்டில் அதிகபட்ச சில்லரை விலையை குறைக்க சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை சுமார் 6 சதவிகிதம் வரை குறைக்க ஒப்புக்கொண்டன. அதாவது, ஒரு லிட்டர் சமையலின் விலை சுமார் ரூ.5 முதல் 10 வரை குறையும். இந்த குறைக்கப்பட்ட விலை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்தின் Fortune பிராண்ட் சமையல் எண்ணெய்களை விற்பனை செய்யும் அதானி வில்மர் மற்றும் ஜெமினி பிராண்டின் உரிமையாளரான ஜெமினி எடிபிள் மற்றும் ஃபேட்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் விலையை குறைத்துள்ளன. அதாவது ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்யின் விலை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலையை குறைத்துள்ளன.
சமையல் எண்ணெய்யின் விலை குறைப்பு இன்னும் சில வாரங்களில் சந்தையில் அமல்படுத்தப்படும் என்று, அதனுடைய நேரடி பலனை நுகர்வோருக்கு கிடைக்கும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சமையல் எண்ணெய் விலை குறைக்க வேண்டுமென்று மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதை அடுத்து இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.