1. Home
  2. தமிழ்நாடு

இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக முயற்சி.. முதல்வர் குற்றச்சாட்டு..!

இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக முயற்சி.. முதல்வர் குற்றச்சாட்டு..!

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, 200 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. இதேபோல், 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்களுக்கு டெல்லி அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், ஆம் ஆத்மி அரசு வழங்கிய மின் மானியத் திட்டத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு தலைமைச் செயலருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று உத்தரவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தி, "ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.


உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like