இரண்டு காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய பெண்!!
பெண் ஒருவர் தனது இரண்டு காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், கர்ப்பிணியும், அவருடன் இரண்டு ஆண்களும் நடனமாடுகிறார்கள். அந்த பெண் இரண்டு ஆண் நண்பர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமானதை தொடர்ந்து மூவரும் வளைகாப்பு நடத்தி கொண்டாடியுள்ளனர். ஆனால் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அந்த பெண் இரண்டு ஆண்களுடன் பழகியது, அந்தந்த ஆண்களுக்கும் தெரியும்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது அவருடைய வாழ்க்கை என்று சிலரும், பரஸ்பர புரிதலுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் கேலி செய்து கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். டிஎன்ஏ சோதனையில் இருவரும் குழந்தைக்கு தந்தையாக இல்லை என்றால் என்ன செய்வது என்ற ரீதியில நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in