1. Home
  2. தமிழ்நாடு

இமாச்சலப் பிரதேச முதல்வர் இன்று பதவியேற்பு...

இமாச்சலப் பிரதேச முதல்வர் இன்று பதவியேற்பு...

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்கிறார்

இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

அங்கு 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறாமல் தொடருகிறது. குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்தது. இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது.



இமாச்சலப் பிரதேச முதல்வர் இன்று பதவியேற்பு...



இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கி நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதலமைச்சராக கட்சித் தலைமை நேற்று அறிவித்தது.


இந்நிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவியேற்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like