1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்!!

இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்!!

பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுக் கட்டணத்தை இன்று முதல் வரும் 20ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தோ்வுகள் இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடமிருந்து தோ்வுக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவா்களைத் தவிா்த்துவிட வேண்டும். பெறப்பட்ட தொகையை ஜனவரி 20ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும்.


இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்!!

சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் தோ்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடைவா்கள் அல்ல என தெரிவிக்க்பபட்டுள்ளது.

இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடா்பு கொள்ளலாம்.

பிளஸ் 2 பொதுத்தோ்வுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like