இன்று முதல் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!!
இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை 17ஆம் தேதியான இன்று மாத பிரதோஷம், மற்றும் வருகின்ற புதன் கிழமை 19ஆம் தேதி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 20ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிரதோஷம் மற்றும் பெளர்ணமி நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in