1. Home
  2. தமிழ்நாடு

இன்று இறைச்சி கடைகள் திறந்திருக்காது!!

இன்று இறைச்சி கடைகள் திறந்திருக்காது!!

இன்று காந்தி ஜெயந்தி என்பதால் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இன்று ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

உக்கடம், சத்தி ரோடு மற்றும் போத்தனுாரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அறுவைமனைகள் மற்றும் துடியலுாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாக இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


இன்று இறைச்சி கடைகள் திறந்திருக்காது!!


அதே போல் இன்று டாஸ்மாக் கடைகளும் செயல்படாது. கோவையை பொறுத்தவரை இரண்டு நாட்கள் மதுபானக்கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காந்தி ஜெயந்தி மற்றும் வரும் 9ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் ஆகிய தினங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like