1. Home
  2. தமிழ்நாடு

இன்று இயல்பை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை..!!

இன்று இயல்பை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது. இந்த நிலையில், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை வரை உயர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like