1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

இன்று இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி இன்று நடைபெறுவதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உட்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like