1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி..!!


தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் பழக்கம், விஷ சாராய மரணங்கள் ஆகியவற்றை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று காலையில் மனு அளிக்க உள்ளார்.

இதற்காக சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகை செல்கின்றனர். அங்கு முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கிறார். இதையொட்டி சென்னை மற்றும் புறநகரில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் அதில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like