1. Home
  2. தமிழ்நாடு

இனி விண்வெளி டூருக்கு மட்டும் இல்ல... திருமணமும் செய்யலாம்..!!

இனி விண்வெளி டூருக்கு மட்டும் இல்ல... திருமணமும் செய்யலாம்..!!

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய நிகழ்வாகும். திருமணம் இரு நபர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. திருமண தினத்தன்று நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள் நம் வாழ்வில் எப்போதும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெரிட் தீவை தலைமைடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஒரு படி மேலே சென்று விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.


இனி விண்வெளி டூருக்கு மட்டும் இல்ல... திருமணமும் செய்யலாம்..!!

கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக 1.25 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு தொடங்க உள்ள இத்திட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே முண்டியடித்துக் கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நெப்டியூன் கேப்ஸ்யூல்கள் விண்வெளியின் அழகை தம்பதிகள் கண்டு ரசிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இந்த கேப்ஸ்யூல்கள் தம்பதிகளின் பாதுகாப்புக்காக மணிக்கு 19 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும். மேலும் இந்த கேப்ஸ்யூல்களில் இணைக்கப்பட்டிருக்கும் கார்பன் நியூட்ரல் பலூன்கள் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனில் இயங்கக் கூடியவை என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவை என்று கூறப்பட்டுள்ளது.




Trending News

Latest News

You May Like