1. Home
  2. தமிழ்நாடு

இனி ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம்..! எப்படி தெரியுமா ?

இனி ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம்..! எப்படி தெரியுமா ?

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் மாற்றங்கள் செய்யுமாறு ரெயில்வே வாரியம் சி.ஆர்.ஐ.எஸ். நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட எஸ்.எல்.ஆர். கோச்சில் விலங்குகள் வைக்கப்படும். விலங்குகளின் உரிமையாளர்கள் தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை தங்கள் செல்லப்பிராணிகளுக்கு வழங்கலாம். இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும். டிக்கெட்ட் ரத்து செய்யப்பட்டால், செல்லப்பிராணியின் டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல பல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.குறிப்பாக அந்த செல்லப்பிராணிகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். இது மட்டுமல்ல பயண தேதியிலிருந்து 24-48 மணி நேரத்திற்கு முன்னதாக டாக்டரிடம் எடுக்கப்பட்ட ஃபிட்னஸ் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். பயணத்தின் போது தனது செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்பவர்கள் அதற்கான உணவு, தண்ணீர், செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமான பொம்மைகளையம் பயணத்தின் போது உடன் வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஐஆர்சிடிசி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்த செல்ல பிரத்தியேக வெப்சைட் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. உங்கள் ரயில் பயணத்தில் செல்ல பிராணிகளையும் அழைத்துச் செல்ல விரும்பினால் அந்த வெப்சைட்டில் செல்ல பிராணிகளுக்கான டிக்கெட்டையும் எடுத்துச் செல்ல முடியும்.

Trending News

Latest News

You May Like