இனி மெட்ரோ டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.. எப்படி தெரியுமா ?
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இனி வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், இனி வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறலாம்.. டிக்கெட்டை பெறுவது எப்படி?
- வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 83000 86000 என்ற எண்ணிற்கு Hi என்ற அனுப்ப வேண்டும்.
- உங்களின் எண்ணில் புக் டிகெட், அருகில் உள்ள ரயில் நிலைங்கள், மற்ற சேவைகள் என்று 3 வகையான சேவைகளை பெற முடியும்.
- இதில் புக் டிக்கெட் என்ற சேவையை தேர்வு செய்து நீங்கள் பயணம் செய்ய உள்ள ரயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- எத்தனை டிக்கெட் என்பதை தேர்வு செய்த பின்,ஒரு முறை தகவல்களை சரி பார்த்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை தேர்வு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.
- கட்டணம் செலுத்தி பிறகு டிக்கெட் உங்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
.png)