இனி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது கட்டாயம்..!
தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துறை தலைவர்கள், கழகம் மற்றும் வாரியத் தலைவர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கரும்பலகையில், நாள்தோறும் ஒரு திறக்குறளை அதன் பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். மேலும், ஆங்கில அர்த்தத்துடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில அலுவலகங்களைத் தவிர்த்து மற்ற துறைகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. இனிமேல் சரியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.