1. Home
  2. தமிழ்நாடு

இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!!

இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!!

கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவில் வெறுப்புணர்வும், பிரிவினைவாத வன்முறை செயல்களும், இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையும் அதிகரித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது.

இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!!


காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு 1980, 90 களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோஷத்தை எழுப்பி பிரிவினைவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டுவந்தன.

இத்தகையை சூழலில் மாணவர்களும், குடிமக்களும் கனடா நாட்டின் ஒடோவா, டொரான்டோ அல்லது வான்கவர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்களின் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

MADAD என அரசு போர்டலிலும் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு தொடர்பு கொண்டு உதவ இவை பயன்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like