1. Home
  2. தமிழ்நாடு

இந்திய பிரதமர் எதிராக புகார் அளிக்க வேண்டும்; பாகிஸ்தான் நடிகை ட்வீட்டால் பரபரப்பு..!

இந்திய பிரதமர் எதிராக புகார் அளிக்க வேண்டும்; பாகிஸ்தான் நடிகை ட்வீட்டால் பரபரப்பு..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தபோது, ராணுவத்தால் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கானின் கைது, அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெஹார் ஷின்வாரி. இவர் தனது ட்விட்டர் பதிவில், டெல்லி போலீசாரின் ஆன்லைன் வழி லிங்க் எவருக்கேனும் தெரியுமா? என்னுடைய பாகிஸ்தான் நாட்டில் குழப்ப நிலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை பரப்பி வரும் இந்திய பிரதமர் மற்றும் ரா எனப்படும் இந்திய உளவு அமைப்புக்கு எதிராக நான் புகார் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகையின் ட்வீட்டுக்கு பதிலளித்த டெல்லி போலீஸ், ``நாங்கள் பயந்துவிட்டோம். பாகிஸ்தானில் இன்னும் நாங்கள் அதிகாரத்தைப் பெறவில்லை. ஆனால், நாங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உங்கள் நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் எப்படி டுவீட் செய்கிறீர்கள்" எனக் கேட்டிருப்பது பலரிடையே சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


 

Trending News

Latest News

You May Like