1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இந்த மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கடலூர் ராமலிங்க அடிகளார் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், அதாவது தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நன்னாளில் ஜோதி வடிவமாக கலந்தார். அதன் பிறகு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக விளங்கும் வள்ளலார் அவர்களை அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர்.ஜோதி திருவிழா வடலூரில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வள்ளலாரின் ஜோதி திருவிழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, திருவண்ணாமலை புதுச்சேரி, காரைக்கால், கோவை மற்றும் கரூர் மாவட்டத்தில் நாளை பிப்ரவரி 5ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், மதுபான பார் என அனைத்தையும் மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், உத்தரவை மீறி திருட்டுத் தனமாக மது விற்பனை செய்வோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like