இது தேவையா ? போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்த மணமகளுக்கு நேர்ந்த விபரீதம்..!!
இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்களுக்கு விரிவான ஸ்டண்ட் செய்யும் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், இந்த ஸ்டண்ட் எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்பதை சமீபத்திய வீடியோ நிரூபிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மணமகள், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது கையில் இருக்கும் துப்பாக்கி அவரது முகத்திற்கு நேராக வெடித்துவிட்டது. மொத்தம் 13 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரே மேடையில் போஸ் கொடுக்கிறார்கள். தம்பதியர் கையில் இருந்த துப்பாக்கிகளில் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து மணமகளின் முகத்தை தாக்கியது.
இந்த சம்பவம் நடந்ததும் மணமகள் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு மேடையில் இருந்து அலறியடித்து ஓடுகிறார். மணமகளைக் காப்பாற்ற மணமகனும், மற்றவர்களும் ஓடி சென்று சூழ்ந்து கொள்கின்றனர். திருமண நாளில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் பரவும் இந்த வீடியோவுக்கு மக்களிடையே கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “இப்போதெல்லாம் ஏன் இப்படிச் செய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் திருமண நாளை ஒரு பார்டி மாதிரி நடத்துகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் சிறப்பான நாளை, புகைப்படம், மற்ற செயல்பாடுகளால் சில நேரம் கெடுத்துக்கொள்கிறார்கள்” என ஒருவர் கருத்து தெரிவித்தார்.
மற்றொருவர், “வீடியோவை பார்த்து பயந்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார். இன்னொருவர், “வைரலாகப் போவதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்” என்று காட்டமாக கருத்து கூறியுள்ளார். இன்னொருவர், “மணப்பெண்ணின் நிலை என்ன ஆனது” என வருத்தமாக கேட்டிருக்கிறார். அந்த மணமகளின் நிலை குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.