இது தெரியுமா ? வாட்ஸ்அப்பில் அட்டகாசமான அப்டேட்..!!
வாட்ஸ்அப்பில் பல புதிய அம்சங்கள் வரவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில், கருத்துக்கணிப்பு(poll) என்ற புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்புகளில் ஒற்றை வாக்கு முறையை தேர்ந்தெடுக்கும் போது, ஒரு பயனர் ஒரு வாக்கை மட்டுமே செலுத்த முடியும். கருத்துக் கணிப்புகளைத் தேடவும், அவற்றின் முடிவுகளையும் அறியும் வகையில் புது அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர புகைப்படம், வீடியோக்களை ஃபார்வர்டு செய்யும்போது அதிலிருக்கும் கேப்ஷன்களை அப்படியே வைக்கவும், நீக்கவும், மாற்றி எழுதவும் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.