இது தான் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணம்..! குற்றப்பத்திரிகையில் வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்..!!
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். 9 மாத விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே - பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை எனவும், பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாகவும், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக மாணவர்கள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது என்றும், மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனவும், மாணவி இறந்த அன்றே, இறப்புக்கான காரணத்தை காவல்துறை சொல்லி இருந்தால் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது எனவும் தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தை, கனியாமூர் பள்ளி பின்பற்றவில்லை என்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.png)