இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்!!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது இந்த இடைத்தேர்தல்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் கே.எஸ். தென்னரசுவை இன்று வேட்பாளராக அறிவித்தார்.
இந்நிலையில் ஒரு வழியாக ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளார். அவரது ஆதரவாளரான செந்தில் முருகன் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in